மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 31 ஜனவரி, 2012

உருகும் உயிர் ( நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் விழிப்புணர்வு போட்டிக்கான கதை)

நேசம் மற்றும் யுடான்ஸ் இணைந்து நடத்தும் பாராட்ட வேண்டிய விழிப்புணர்வுப் போட்டி. இதில் கலந்து கொள்ளும் விதமாக எழுதப்பட்டதுதான் இந்தக் கதை. பரிசு வேண்டும் என்ற நோக்கில் எழுதப்படவில்லை. கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இரண்டு மாத காலமாக எழுதாத நான் ஜனவரி 31 இரவு 10 மணிக்கு எழுதிய கதை இது. நல்லாயிருக்கிறதா இல்லையா என்பதை உங்கள் முடிவுக்காக...

நட்புடன்

-'பரிவை' சே,குமார்.

*******




ன்னவாம்... உங்காத்தா போன் பண்ணினோன தனியா போயி பேசினிங்களே என்ன?” முகத்தை ஒரு மாதிரி வைத்துக்கொண்டு கேட்டாள் தாரிணி.

“அப்பாவுக்கு உடம்புக்கு முடியலையாம்... அதான் அம்மா போன் பண்ணுச்சு...” வெறெதுவும் சொல்லாமல் தரையை பார்த்தபடி நின்றான் அருண்.

“ம்... என்னவாம் கிழத்துக்கு....”

அவளை முறைத்துப் பார்த்தான். “சரி... உங்கப்ப்ப்ப்பாவுக்கு...” அழுத்தமாக சொன்னாள்.

“தெரியலை... காச்சலா இருந்துச்சாம்... நைட்டெல்லாம் வாமிட் எடுத்தாராம்... ரொம்ப டயர்டா இருக்காராம்... ரங்கசாமி மாமா எதோ பச்சிலை மருந்து கொடுத்தாராம்... இருந்தும் பயமா இருக்குன்னாங்க...”

“சும்மா காச்சலுக்கு எதுக்கு ஊரைக் கூட்டுதாம்... நல்லாத்தானே நங்கு... நங்குன்னு திரியிறாரு... இவ்வளவு ஏன் ஒரு வாரம் முன்னாடி பானுமதி மக கல்யாணத்துல பிரசர் இருக்குன்னு இல்லாம ஆட்டுக்கறிய தின்னு தீத்தாரே... அவருக்கு என்ன வரப்போகுது...”

“ஏண்டி... உடம்பு முடியலைன்னு அம்மா போன் பண்றாங்க... வயசான அவங்களுக்கு நாமதான் ஆதரவு... ஆறுதலா நாலு வார்த்தை சொல்லாட்டியும் எதுக்கு இப்படி பேசுறே... நான் போயி என்ன எதுன்னு பாத்துட்டு வாரேன்...”

“அதானே பாத்தேன்... எங்க இன்னும் கிளம்பக் காணுமேன்னு பாத்தேன்... உங்கண்ணன் என்ன பண்றாராம்... ஒவ்வொரு முறையும் நாமதான் அழணுமா என்ன...”

“சும்மா இருடி... பெத்தவங்களுக்கு செய்யிறதுக்கு கணக்குப் பாத்துக்கிட்டு...”

“ஆமா... கொட்டிக்கெடக்கு... அவருக்கு போன் பண்ணி வரச்சொல்லி பாருங்க... சும்மா எப்ப பாத்தாலும் உங்காத்தா ஆ... ஊன்னா இங்கதான் போன் பண்ணும்... அவரையும்தானே பெத்தாங்க...”

“சரி... உம் பஞ்சாங்கத்தை மூடு... நான் பாத்துக்கிறேன்... எனக்கு தெரியும் என்ன பண்றதுன்னு...” என்றபடி ஊருக்கு கிளம்பினான்.

------------------------------------

வாப்பா...”

“என்னம்மா... அப்பாவுக்கு என்ன... எதுவும் சாப்பிடக்கூடாததை சாப்பிட்டுட்டாரா?”

“இல்லப்பா... கொஞ்ச நாளாவே அசதியாவே இருக்கும்பாரு... நேத்து ராத்திரியில இருந்து காச்சல்... வாந்தின்னு கெடக்குறாரு... பச்சில மருந்து கொடுத்தும் சரியா வரலை... டவுனு டாக்டர்கிட்டதான் பாக்கணுமாம்... அதான்...”

“அண்ணனுக்கு போன் பண்ணுனியா?”

“பேசினேன்... அவனுக்கு வேல இருக்காம்... தம்பிய கூட்டிக்கிட்டுப் போன்னு சொல்லிட்டான்...”

“ஆமா... அவருக்கு எப்பவும் வேலதான்... நா மட்டும் சும்மா இருக்கேனாக்கும்... செலவழிக்க அவருக்கு கஷ்டம்...”

“....” ஒன்றும் பேசாத தாய் மனம் பெத்தவங்களுக்கு செய்யிறதுக்கு ரெண்டு பேருக்குமே மனசில்ல... என்ன பண்றது... நாம பெத்த நேரம் அப்படின்னு நினைத்துக் கொண்டது.

“ஒண்ணும் பேச மாட்டியே... சரி... அப்பாவை கெளப்பு போவோம்...”

------------------------------------



ருண்... அப்பாவை நல்லா செக் பண்ணியாச்சு... அவருக்கு ஒண்ணுமில்ல... சாதாரண காய்ச்சல்தான்... ஆனா... அவரு புகையிலையை நிப்பாட்டுறது நல்லது...”

“எங்கே டாக்டர்... யாரு சொன்னாலும் கேக்க மாட்டேங்கிறாரு... ஒரு தடவை மஞ்சக் காமாலை வந்தப்போ சுருட்டை நிப்பாட்டியிருந்தாரு.... அப்புறம் வாய் நமநமன்னு இருக்குன்னு ஊர்ல அப்ப அப்ப புகையிலை வாங்கிப் போட்டாரு...... அப்புறம் பாக்கெட் பாக்கெட்டா வாங்கித்திங்க ஆரம்பிச்சிட்டாரு... அதனால எதாவது...” அப்பாவை பார்த்தபடி கேட்டான்

“என்ன நீங்க இப்படி கேட்டுட்டிங்க... படிச்சிருக்கீங்க... புகையிலைப் பழக்கத்துல இருக்கவங்களுக்குத்தான் அதிகமா புற்று நோய் வருது... அவருக்கு இப்ப இருக்க கண்டிசன்ல புற்று நோய் வர அதிக வாய்ப்பிருக்கு... வாயெல்லாம் அரிச்சிருச்சி... இதுவரைக்கும் சரி... இனி கண்ட்ரோலா இல்லைன்னா அனுபவிச்சித்தான் ஆகணும்... ஐயா புகையிலை போடுறத நிப்பாட்டிக்குங்க... ” என்று நிறைய புத்திமதிகள் சொன்னார்.

வெளியில் வந்ததும் “என்ன டாக்டர் சொன்னது புரிஞ்சதா... போயலை போடக்கூடாதாம்... போட்ட புத்து நோய் வந்து அவதிப்படணுமாம்... அந்த சனியனை நிப்பாட்டுங்க... சரியா...”

“ஆமா... சாவு எப்ப வரணுமின்னு இருக்கோ அப்ப வரத்தான் போகுது... போயலை போடுறதாலதான் வருதாக்கும்... அட போடா”

“அதானே நாம யார் சொல்லி கேட்டிருக்கோம். அம்மா.... நீ சொல்லி வையி... எதையாவது இழுத்து வச்சிக்கிட்டா நா வந்து பாக்க மாட்டேன்... ஆமா... சொல்லிப்புட்டேன்.”

------------------------------------



ன்ன அப்பாவுக்கு பாத்து விட்டுட்டு வந்தாச்சா... ஆமா உங்கண்ணன் வந்திருக்கமாட்டாரே... அவரு பொழக்கத் தெரிஞ்சவரு... நம்மளமாதிரியா...”

“இப்ப என்னடி... எதுக்கு இப்படி பேசிக்கிட்டு இருக்கே... உங்கப்பாவுக்கு உன்னோட அண்ணன் தம்பி பாக்கலையின்னா எப்படி துடிக்கிறே... எங்கப்பா அம்மாவுக்கு நா பாத்த மட்டும் கத்துறே... நாளைக்கு உனக்கு உம்பிள்ள பாக்காம விடுறப்போதான் இந்த வலி தெரியும்... சும்மா கத்துறதை நிப்பாட்டிட்டு வேலயப் பாரு...”

“என்னய அதட்டுங்க... நாந்தானே உங்களுக்கு கெடச்சேன்...”

“சை...” என்றவனின் மொபைல் சிணுங்கியது... “அடுத்த என்ன அழைப்பு... எதாவது வந்துக்கிட்டே இருக்குமே...” என்றாள் சத்தமாக.

“என்ன திவாகர்...”

எதிர்முனை சொன்னதைக் கேட்டதும் “என்னடா சொல்றே... சுப்பண்ணனா... எதோ உடம்பு முடியலைன்னாங்க... அவங்க மகன் சென்னையில வச்சிப் பாக்கிறதா சொன்னாங்க... எப்படிடா...”

“அப்படித்தாண்டா சொன்னாங்க... ஆனா அவருக்கு ரத்தப் புத்து நோயாம்... ஆள உருக்கிருச்சு... பச்சப் புள்ள மாதிரி கெடக்காருடா... இங்க காரியம் செய்யணுமின்னுதான் சென்னையில இருந்து கொண்டாந்திருக்காங்க... உடனே எடுத்துடுவாங்க... சீக்கிரம் வா...”

“சரி... வாறேன்...”

சுப்பண்ணனின் இறுதிச் சடங்கின் முடிவில் புற்று நோய் ஒழிப்புக்கான உறுதி மொழியை தோழர்கள் எடுத்துக் கொள்ள, தனது மொபைலில் அம்மாவை அழைத்து “அப்பா நமக்கு வேணும்மா... அவரை போயலையை குறைக்கச் சொல்லும்மா... இந்தா லெட்ச லெட்சமா செலவழிச்சும் காப்பாத்த முடியாம போயி சேர்ந்திட்டாரு... அப்பாவ மட்டுமில்ல நம்ம ஊர்ல போயலை, சிகரெட்டு பிடிக்கிற எல்லார்கிட்டயும் சொல்லி விடச் சொல்லும்மா...” என்றான் தேம்பலாய்...


-‘பரிவை’ சே.குமார்.

20 எண்ணங்கள்:

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

குமார் எப்படி இருக்கீங்க.. ரொம்ப நாளாச்சு. நல்ல கதை. வெற்றிபெற வாழ்த்துகள்.

Asiya Omar சொன்னது…

கதை மிகவும் அருமை.வெற்றி பெற வாழ்த்துக்கள்.
தம்பி குமார்,அனைவரும் நலமா?இப்ப எங்கே? இங்கே வந்தாச்சா?

r.v.saravanan சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துக்கள் குமார்

சாகம்பரி சொன்னது…

ஒரு அழகிய விருதை தங்களுக்கு வழங்கியுள்ளது தொடர்பான இடுகைக்கு வருகை தாருங்கள். http://mahizhampoosaram.blogspot.in/2012/02/blog-post.html

RAMA RAVI (RAMVI) சொன்னது…

குமார்,எனது “விருது” பதிவில் எனக்கு கிடைத்த ஒரு விருதினை,உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்.நேரம் கிடைக்கும் பொழுது பார்க்கவும்.

Jaleela Kamal சொன்னது…

ஏன் உடனாஸில் சம்மிட் செய்யல?

Jaleela Kamal சொன்னது…

அருமையான கதை
வாழ்த்துக்கள்.

Jaleela Kamal சொன்னது…

//அப்பாவ மட்டுமில்ல நம்ம ஊர்ல போயலை, சிகரெட்டு பிடிக்கிற எல்லார்கிட்டயும் சொல்லி விடச் சொல்லும்மா...” என்றான் தேம்பலாய்//

அக்கறையுடன் சொல்லி இருக்கிறா

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஸ்டார்ஜன்...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க ஆசியாக்கா...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


இன்னும் ஊரில்தான்... இங்கு அனைவரும் நலமே... அதனால்தான் பதிவுகள் எழுத இயலவில்லை...

வந்தால் அலைனில்தான் வேலை...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சாகம்பரி அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

விருதுக்கு நன்றி... விரைவில் விருதை இங்கு பகிர்கிறேன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரம்வி அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

விருதுக்கு நன்றி... விரைவில் விருதை இங்கு பகிர்கிறேன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஜலீலா அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

யுடான்சில் இணைத்துள்ளேன்... எனக்கும் வாக்குப்பட்டையில் 3 ஓட்டு காட்டுகிறதே...

மனோ சாமிநாதன் சொன்னது…

வாழ்க்கையின் தினசரி புலம்பல்கள், வலிகள்,சங்கடங்கள் அனைத்தையும் புற்று நோயால் இணைத்து யதார்த்த சரளமான நடையில் அழகிய சிறுகதையாக உருவாக்கியிருக்கிறீர்கள். போட்டியில் வெற்றி பெற இனிய வாழ்த்துக்கள்!!!

Jaleela Kamal சொன்னது…

al ain nil room kidaiththu viddathaa????

ஸாதிகா சொன்னது…

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி மனோ அம்மா.


இல்லை ஜலீலாக்கா...
எனக்கு இப்போ அலைன் பவர் ஹவுசில் வேலை. எனக்கு அலைன் புதுசு. அருகில் இருந்தால் நல்லாயிருக்கும் என்று பார்க்கிறேன். இன்னும் அமையவில்லை.


வலைச்சர அறிமுகத்துக்கு நன்றி ஸாதிகாக்கா.

எல் கே சொன்னது…

விருது கொடுத்திருக்கிறேன்

http://lksthoughts.blogspot.in/2012/03/blog-post.html

பெயரில்லா சொன்னது…

நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

பெயரில்லா சொன்னது…

நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

கீதமஞ்சரி சொன்னது…

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_14.html