மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 26 ஜூன், 2013

அபுதாபியில் இருந்து....


வணக்கம்.

ஊரில் இருந்து வந்து பத்து நாளாகியும் இந்த முறை ஊர் நினைப்பும் ஊருக்கே மீண்டும் போய்விட வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கித்தான் நிற்கிறது. ஒவ்வொரு முறையும் இந்த எண்ணம் தோன்றினாலும் இந்த முறை பசுமரத்து ஆணி போல பதிந்து விட்டது. அதற்கான முயற்சியாக சில நண்பர்களிடம் எனது பயோடேட்டா கொடுத்து நல்ல வேலையாக வந்தால் பாருங்கள் என்றும் சொல்லியிருக்கிறேன். பார்க்கலாம்.

எத்தனை கஷ்டப்பட்டாலும் நமக்குன்னு ஒரு வீடு கட்டி அதில் குடியேறும் சந்தோஷத்திற்கு அளவேயில்லை. உறவுகளும் நட்புக்களும் வந்து சிறப்பிக்க எங்கள் இல்ல புதுமனை புகுவிழா சிறப்பாக நடைபெற்றது. கடனை நினைத்து பயமாக இருந்தாலும் குழந்தைகளின் சந்தோஷம் மனசுக்கு நிறைவைக் கொடுத்தது.

எங்கள் இல்ல விழாவிற்கு மின்னஞ்சலில் நான் அனுப்பிய அழைப்பை ஏற்று மதுரையில் இருந்து தனது துணைவியாருடன் வந்திருந்து வாழ்த்திய சீனா ஐயா அவர்களுக்கு எங்களின் நன்றிதனை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.அன்றைய தினத்தில் அவருடன் அதிக நேரம் பேசமுடியவில்லை என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. மேலும் வருகிறேன் என்று சொன்ன சில நட்புக்களும் உறவுகளும் வரவில்லை எனினும் என் நண்பர்கள் தேனி, நாகர்கோவிலில் இருந்து வந்தது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது.

யார் வரவேண்டும் என்று அதிகம் எதிர்பார்த்தேனோ அந்த நண்பனுக்கு இங்கிருந்து மின்னஞ்சல் செய்தேன். ஊரில் போய் அவரது இரண்டு நம்பருக்கும் முயற்சித்து முயற்சித்துத் தோற்றேன். விழா முடிந்த மறுநாள்தான் அவரைப் பிடிக்க முடிந்தது.நீண்ட நேரம் பேசினோம். அதன்பிறகு வேலைப்பளுவில் போன் பண்ணமுடியாமல் போக அவரும் போன் பண்ணவில்லை.நண்பேன்டா...

இன்னும் சகஜ நிலைக்கு வரவில்லை என்பதால் வலைப்பூ பக்கம் வரவில்லை. இருந்தும் இங்கு வந்து நா.பார்த்தசாரதியின் துளசிமாடம், சு.சமுத்திரத்தின் கல்தூண் மற்றும் ஒற்றைவீடு ஆகிய நாவல்களைப் படித்ததில் நாவல்கள் மீது ஒரு ஆர்வம் வந்திருக்கிறது. தற்போது என் நண்பன் பேராசிரியர் கரு. முருகனின் இரு சிறுகதைத் தொகுப்புக்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன். வாசிப்பு அனுபவம் சுகமாய் இருக்கிறது.

எனது முதல் தொடர்கதையான கலையாத கனவுகளை தொடர்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன். விரைவில் தொடர முயற்சிக்கிறேன்.

மீண்டும் உங்களை சந்திக்கும் மகிழ்வுடன்....
-'பரிவை' சே.குமார். 

8 எண்ணங்கள்:

ராஜி சொன்னது…

சொந்த வீடு கனவு நிறைவேறுனதுக்கு வாழ்த்துக்கள் சகோ!. அப்புறம் சீக்கிரம் இந்தியாவிலேயே நல்ல வேலை கிடைக்க வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கனவு நிஜமானதற்கும், விரைவில் தொடரை தொடரவும் வாழ்த்துக்கள்...

Yaathoramani.blogspot.com சொன்னது…

சாதித்து முடித்ததற்கும்
இனி சாதிக்க இருப்பதற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் சொன்னது…

சொந்த வீட்டின் நிம்மதி சொல்லிலடங்காது..

நல்வரவு..

r.v.saravanan சொன்னது…

சொந்த வீட்டின் கனவு நிறைவேறியதற்கு வாழ்த்துக்கள் குமார்

Unknown சொன்னது…

வணக்கம்,குமார்!நலமா?///வீட்டைக் கட்டிப்பார் ....................என்று சொல்வார்கள்.கவலைப்படாதீர்கள்,ஆண்டவன் அருள் கிட்டும்!சொந்த ஊரில்/நாட்டில் அருமையான வேலை கிட்ட பிரார்த்தனைகளும்,வாழ்த்துக்களும்!

Unknown சொன்னது…


புதுமனை புகுவிழாவா! வாழ்க வளமுடன்!

Menaga Sathia சொன்னது…

கனவு இல்லம் இனிதே நிறைவேறியதில் மகிழ்ச்சி,நல்வரவு!!