மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 7 அக்டோபர், 2013

மனசின் பக்கம் : குளிரில் பாடுவோர் சங்கம்

ங்கு குளிர்காலம் ஆரம்பிக்கப் போவதற்கான அறிகுறிகள் கடந்த சில நாட்களாக தெரிய ஆரம்பித்துள்ளது. காலை மாலை வேளைகளில் குளிர்ந்த காற்று வீசுகிறது. ஏழு மணியானாலும் போக மறுத்த சூரியன் ஆறு மணிக்கெல்லாம் காணாமல் போய்விடுகிறது. இன்று ஆறரை மணிக்கு பணி முடித்து திரும்பும் போது நீண்ட நாட்களுக்குப் பிறகு அழகிய பிறை நிலாவைப் பார்த்தேன். இனி சில மாதங்களுக்கு குளிரை அனுபவிக்கப் போகிறோம்... சுட்டெரிக்கும் வெயிலுக்கு விடுமுறை விடப்போகிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.

விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் போட்டியில் என்னைக் கவர்ந்த இருவர் வெளியேறியது மனசுக்கு வருத்தமே. இந்த இருவரில் ஒருவருக்கு இறுதிப் போட்டிக்குச் செல்ல மீண்டும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இன்னொருவருக்கு அதுவும் இல்லை. முதலாமவர் அறுபது வயதுக்கு மேல் ஆனாலும் இளைஞர்களுக்குப் போட்டியாக பாடி அசத்திய திரு. அழகேசன். இந்தப் அழகிய பெயரைத்தான் தொகுப்பாளர்கள் 'அல்கேட்ஸ்... அல்கேட்ஸ்'ன்னு நாயை கூப்பிடுற மாதிரி கூப்பிட்டார்கள். இவரது பாடல்களில் நிறைய இடங்களில் தவறு வருவது உண்டு. சைலஜா அம்மா இவருக்கு நல்ல ஆதரவு கொடுத்தார். அவருக்குப் பிறகு மற்றவர்களும் இவரை மதித்தார்கள் என்றாலும் போட்டி என்று வரும்போது இவர் வெளியாக வேண்டிய சூழல் வந்துவிட்டது. இருந்தாலும் இவருக்கு பைனலுக்கு செல்வதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அதில் தனது திறமையை நிரூபிக்கும் பட்சத்தில் இறுதிச் சுற்றுக்கான மேடையில் பாடலாம். அழகேசன் என்ற இளைஞர் மீண்டும் பந்தயக் களத்துக்குள் நுழைகிறாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.



அந்த இரண்டாவது நபர் மாற்றுத் திறனாளி... இப்படிச் சொல்லக்கூடாதுதான் தன்னம்பிக்கையின் சிகரம் திரு.ரிஸ்வான் பாய் அவர்கள். வீல் சேரில் அமர்ந்து கொண்டு அந்த மனிதர் பாடிய பாடல்கள் அனைத்தும் அத்தனை அருமை. அவர்  வெளியேறிய அன்று கூட அவருக்குக் கொடுத்த இரண்டு நிமிட நேரத்தில் எந்தவித பதட்டமும் இன்றி 'நிலா... நீ வானம் காற்று...' பாடலை அருமையாகப் பாடினார். சொல்லப் போனால் அவருடன் பாடிய மற்ற இருவரில் ஒருவர் சொதப்பலாகத்தான் பாடினார். ஆனால் நடுவர்களின் கண்கள் ரிஸ்வான் பாய் மீதுதான் இருந்தது என்பது அவர்க்ள் சொன்ன முடிவில் அப்பட்டமாகத் தெரிந்தது. தான் வெளியாகிறோம் என்றதும் அழுது ஆர்ப்பாட்டம் செய்து எல்லாரையும் கட்டியழுது என்றெல்லாம் எதுவும் செய்யாமல் தன்னை வீல் சேரோடு தூக்கி உதவி செய்தவர்களும்... தான் பாடியபோது இசையமைத்தவர்களுக்கும் நடுவர்களுக்கும் சகபோட்டியாளர்களுக்கும் நன்றி சொன்ன அந்த நல் இதயம் கடைசியில் செய்ததுதான் எல்லாரையும் ஆச்சர்யப்பட வைத்தது. தனது வீல் சேரை அங்கே விட்டுவிட்டுப் போவதாகவும் அடுத்த சூப்பர் சிங்கரில் தன்னைப் போல் ஒருவர் வந்து பாடவேண்டும் என்று சொல்லி அதில் இருந்து இறங்கி... தவழ்ந்து போய் காரில் ஏறினார்.... ரிஸ்வான் பாய்... உங்கள் எண்ணம் கண்டிப்பாக நிறைவேறும்...  என்ன சொல்றது.... யூ ஆர் ரியலி கிரேட் சார்... வாழ்த்துக்கள். உங்களது வெட்டி வேரு வாசம் எங்களுக்குள் என்றும் வாசமாய் இருக்கும்.



சூப்பர் சிங்கரில் தமிழைக் கொல்லும் சுஜாதா அவர்கள் பேசும் போது நம்மால கேட்க முடியலை... மற்றவர்கள் ஓகே... இருந்தாலும் குறிப்பிட்ட பெண்கள் பாடினால் ஆஹா... ஓஹோ... என்று புகழ்வதை சூப்பர் சிங்கர் ஆரம்பத்தில் இருந்து கலந்து கொண்ட எல்லா நடுவர்களும் பாரபட்சம் இன்றி செய்து வருகிறார்கள். அதற்கு இவர்களும் விதி விலக்கல்ல...

இப்போ பதினான்கு பேர் இருக்கிறார்கள்... இவர்களில் வெளியாகப் போகிறவர்கள் பெரும்பாலும் ஆண்களாகத்தான் இருக்கும். இறுதிப் போட்டிக்கான விழா மேடையில் இந்த முறையாவது சென்ற முறை நடந்த அவலங்கள் நடக்காமல் இருந்தால் நல்லது. பார்க்கலாம்... இந்த முறை பார்வதிக்கு எப்படியும் பரிசு கிடைக்க வாய்ப்பிருக்கிறது... ஆனால் அவர்களின் முடிவில் யார் இருக்கிறார்கள் என்பது விஜய்க்கே... நான் விஜய் தொலைக்காட்சியைச் சொன்னேன்....



ருத்தப்படாத வாலிபர் சங்கத்தை மீண்டும் ஒரு முறை பார்த்தேன். கொய்யால மாப்பிள்ளையை மாத்திப்புட்டாய்ங்கய்யா.... பேனர்ல லதாபாண்டிக்கு மாப்பிள்ளை ரவிக்குமார்ன்னு போட்டிருந்தாய்ங்க... ஆனா பாருங்க கல்யாண மேடையில சகாதேவனை உக்கார வச்சிட்டாய்ங்க... ரெண்டு செகண்ட் வர்ற கல்யாண மேடையை எவன் பாக்கப் போறான்னு நினைச்சி மாப்பிள்ளையை மாத்திட்டாரய்யா இயக்குநரு... நாங்கல்லாம் கண்ணுக்குள்ள வெளக்கெண்ணையை ஊத்திக்கிட்டு திரியிறவங்க... எங்ககிட்டேவா.... சு - என்ற எழுத்தை ஒரு இடத்தில் மட்டும சூன்னு அழுத்திப் பாடினதையே கண்டுபிடிச்சவங்க இதை விட்டுடுவோமா... இன்னும் என்னென்ன இருக்கோ பேசாம வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை திறனாய்வு பண்ணிடலாமோ...
மீண்டும் மனசு பேசும்...

-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை

ஸ்ரீராம். சொன்னது…


சென்னையிலும்கூட குளிர்காலம் என்பது குறைவாகத்தான் இருக்கிறது! வெய்யில்.. வெய்யில்.. வெயில்தான்!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எல்லாம் பார்ப்பதில்லை குமார்...! :))

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரிஸ்வான் பாய் அவர்களின் தன்னம்பிக்கை, மன உறுதி - அசுர பலம்...

Unknown சொன்னது…

#பேசாம வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை திறனாய்வு பண்ணிடலாமோ...#
நாம நம்ம பதிவிலே பண்ற மாதிரி சின்ன சின்ன தவறுகளை பெரிதுப் பண்ண வேண்டாமே !

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சுட்டெரிக்கும் வெயிலுக்கு விடுமுறை விடப்போகிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.

வாழ்த்துகள்..!

ராஜி சொன்னது…

நாங்கல்லாம் கண்ணுக்குள்ள வெளக்கெண்ணையை ஊத்திக்கிட்டு திரியிறவங்க
>>
அதானே! சின்ன சின்ன தவறுதான் மன்னிச்சுடலாம். ஆனா, ஒரு நடிகனுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையையும் கொடுக்கல்லியே! வருந்ததக்கதுதான்!

Unknown சொன்னது…

என்ன 'கண்' ணய்யா இவருக்கு,ஹி!ஹி!!ஹீ!!!///சு.சி .............ஹூம்.........என்ன இருந்தாலும்/இல்லாட்டாலும் ரிஸ்வான் பாய்............நடுவர்கள் தீர்ப்பே முடிவானது ன்னு வேற சொல்லுறாங்க!என்னமோ போடா கணேசா!!!!