மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 31 மார்ச், 2016

வாக்காளர் அலப்பறை...5

"என்ன இந்தியா புட்டுக்கிச்சு போல..." சிரிப்போடு உள்ளே நுழைந்தான் அவன்.

"அட ஆமா மாப்ள... கொய்யால மூணு அவுட்டு மாப்ள... மூணுமா நோ பாலாப் போடுவானுங்க... முடிஞ்சது.... ஆட்டம் காலி... படுதா காலி மாப்ள..." கணிப்பொறியை ஆப் பண்ணியபடி சொன்னான் மதுரைக்காரன்.

"எனக்கு தெரியும்ல்ல... நம்மாளுக முன்னாடி ரன் அடிக்க முடியாம திணறுனாங்க... இன்னைக்கு ரன் அடிச்சானுங்க... ஆனா பவுலிங்ல திணறிட்டானுங்க..."

"ஆமா மாப்ள... இவனுக்க ஒரு சிக்ஸ் அடிக்கவே திணறுனானுங்க... அவனுக போடுற பாலை எல்லாம் சிக்ஸருக்கு அனுப்புனானுங்க... கேப்டன் கரையேத்துவாருன்னு பார்த்தா கவுத்துட்டாரு... நாளைக்கு ஆபீசு லீவாப் போச்சு... இல்லேன்னா பங்காளியும் பாகிஸ்தானியும் வச்சி வச்சி செய்வானுங்க...."

"கடைசி வரைக்கும் நம்பினேன் கேப்டன் கரை சேப்பாருன்னு..." என்றார் காரைக்குடியார்.

"நல்லா நம்புனீங்க... கேப்டனெல்லாம் கரை சேக்க முடியாதுங்க.... இன்னைக்கு அவனுக்கு விதிச்ச விதி நல்ல விதி அம்புட்டுத்தான்..." என்றார் அவர். அவர் இன்று ஏனோ சற்று சோகமாகவும் இருந்தார்.


"நம்பிக்கைத்தானேண்ணே வாழ்க்கை... சேப்பாருன்னு நம்புவோம்..." என்றபடி அவரருகில் அமர்ந்து "என்னாச்சுண்ணே... இன்னைக்கு ரொம்ப சோகமா இருக்கீங்க...?" என்றான்.

"கம்பெனியில புதிய புராஜெக்ட் இல்லை... ஒருவேளை ரெண்டு மாசத்துல வேலை இல்லைன்னு சொல்லிட்டானுங்கன்னா வாங்கி வச்சிருக்கிற கடனை எல்லாம் எப்படி அடைப்பேன்னு ரொம்ப கவலையா இருக்கு.... மத்தியானம் சாப்பிட கடைக்குப் போனா சாப்பாடே இறங்கலை... பத்தாததுக்கு மலையாளி வேற ரெண்டு மாசத்துக்குள்ள வேற எதாச்சும் நல்ல வேலையா தேடிக்க... இல்லேன்னா வீட்டுக்கு அனுப்பிடுவானுங்கன்னு சொல்லி வெறுப்பேத்துறான்... " புலம்பினார் அவர்.

"அட விடுங்க... எல்லாம் சரியாகும்... இன்னைக்கு கெயில் அவுட்டானது ஐந்து ரன்ல...எல்லாரும் என்ன நெனச்சோம் நாம வின் பண்ணி கோப்பையை வாங்கப் போவோம்ன்னு... ஆனா என்னாச்சு நம்மால முடியும்ன்னு ஆடுனானுங்க... ஜெயிச்சானுங்க... அதுதான் நம்பிக்கை... எல்லாம் நல்லா நடக்கும்... எப்பவும் போல ஜாலியா தேர்தல் விஷயம் பேசுங்க... நாளைக்கு லீவை வச்சிக்கிட்டு கிரிக்கெட் பார்த்து ஆளுக்கொரு பக்கமா சோகமா உக்காந்திருக்காம..." என்றான்.

"ஆமா... என்னத்தைப் பேசி என்ன பண்ண.... கோடிக்கோடியா பணம் பிடிக்கிறானுங்க... எப்படியிருந்தாலும் இந்த முறையும் ஜனநாயக முறையிலான தேர்தல் இல்லைங்க... காசுதான் ஜெயிக்கும்..."

"அது தெரிஞ்சதுதான்... தமிழன் காசுக்கு அடிமையின்னு மறுபடியும் புரூப் பண்ணப் போறானுங்க..."

"ஆமா... ஆமா... மாத்தி மாத்தி அவனுங்க கையில கொடுத்து வேடிக்கை பாக்குறானுங்க...."

"அதுக்குத்தான் இந்த முறை கேப்டனுக்கிட்ட கொடுங்கன்னு சொல்றோம்..." என்றார் காரைக்குடி.

"ஆமா... ஆளு எங்க இருக்காருன்னே தெரியலை... முதல்வர் கேண்டிடேட்ன்னா ஒரு கெத்து இருக்க வேண்டாமா...?" என்றான் மதுரை.

"அப்ப அன்புமணியாகிய நான்... அப்படின்னு தலையில மைக்கைக் கட்டிக்கிட்டு பேசுறாரே அவருக்குப் போடுங்க..." என்றான் அவன்.
"மாற்றம்... முன்னேற்றம்ன்னு சொல்லி ஜாதிச் சல்லிக்கட்டை கட்டவிழ்த்து விட்டு வேடிக்கை பார்ப்பானுங்க...அட ஏன் மாப்ள நீ..." தலையிலடித்துக் கொண்டான் மதுரை.

"அவனும் வேண்டாம்... இவனும் வேண்டான்னா அப்ப மறுபடியும் பதவி ஆசை பிடித்த ஐயாவோ... இல்லேன்னா எனக்கு உறவு இல்லை... சொத்து இல்லை... நான் அன்னக்காவடிங்கிற அம்மாவோதான் ஆளணும்..." கடுப்பாய்ச் சொன்னார் அவர்.

"விஜயகாந்த்தானுங்க சரியான ஆள்..." மீண்டும் காரைக்குடி

"அட அந்தாளை விடுங்க... இந்த சீமான்...?" மெல்ல இழுத்தான் மதுரை.

"சீமானா... அவனெல்லாம் சீன்லயே இல்லைங்க... நரம்பு வெடைக்க பேசினா மட்டும் போதாதுங்க... திறமையான பேச்சு இருக்கணும்... ஆ...ஊன்னா முப்பாட்டன் முருகன்னு சொல்றான்... பெரியாரைப் பின்பற்றி ஆரம்பகாலத்தில் பேசியபோது சிவலிங்கம் என்ன வடிவம்டா... சொல்ல முடியுமாடா... முட்டாப்பயலுகளேன்னு பேசினான்.... இதுல இன்னொரு காமெடி என்னன்னா என் இனமடா... என் தலைவன்டான்னு இலங்கையை வைத்து அரசியல் பேசுவான்... காமெடி பீசுகளெல்லாம் நாடாள முடியாது... படித்தவன் ஒருத்தன் வரணும்..." என்றார் அவர்.

"படித்தவன்னா... நீங்க டாக்டரை சொல்றீங்களா...? இல்லை வக்கீல் வைகோவை சொல்றீங்களா...?" என்றான் மதுரை.

"போன தேர்தல்ல வடிவேலுவை வச்சி காமெடி பண்ணுனானுங்க... அவரு இல்லையில்ல அதான் இந்தத் தேர்தல்ல வைகோ வடிவேலு ஆயிட்டாரு... என்ன பேசுறோம்... எதுக்கு பேசுறோம்... ம்ஹூம்.... எதுவும் தெரியலை... வாய்க்கு வந்ததை பேசுறாரு... விஜயகாந்த் போனதுல அவருக்கு கைகால் புரியலை..." என்றான் அவன்.


"எல்லாக் கட்சியும் மக்கள் நலக் கூட்டணி மேலதான் கல்லெறியுது... அப்ப பயம் இருக்குன்னுதானே அர்த்தம்..." இது காரைக்குடி.

"பயமிருக்கோ... இல்லையோ... முதல்வர் வேட்பாளர் சீன்லயே இல்லையே... முதல்ல முதல்வர் வேட்பாளரை சீனுக்கு வரச் சொல்லுங்க.... அப்புறம் பேசலாம் மக்கள் நலக்கூட்டணி பயம் காட்டுதா... இல்லை படம் காட்டுதான்னு..." என்றார் அவர்.

"ஏங்க இந்த தடவை மக்கள் நலக் கூட்டணி கணிசமான ஓட்டு வாங்கும்..." என்று எடுத்துவிட்டான் மதுரை.

"ஸ்டாலின் தேமுதிகவை பிரிக்க ஆக்சன் ஸ்டாலின்னோ என்னமோ ஒரு திட்டம் போட்டு கணிசமா பிரிக்க ஆரம்பிச்சாச்சாம்... தேர்தலுக்கு முன்னாலயே தேமுதிக ஆட்டம் காணுதா இல்லையான்னு பாருங்க..." என்றார் அவர்,

"ஆட்டமெல்லாம் காணதுங்க.. கேப்டன் ரொம்ப ஸ்டெடி... கட்சியை அழகா கரையேத்துவார் பாருங்க... அடுத்த முதல்வர் அவர்தான்..." இது மதுரை.

"இன்னைக்கு நம்ம தோனியே  திணறிட்டான்... இவரு கரையேத்துறாராம்... அட எங்க சும்மா... ஜோக்கடிக்காதீங்க.... நடக்குறதைப் பேசுங்க.... இந்தா தொண்ணூறு வயசுல கட்டுமரம் பிரச்சாரத்துக்கு கிளம்ப வேன் ரெடி பண்ணிருச்சு... அம்பது வயசுல என்ன பேசுறோம்ன்னு தெரியாம... என்ன செய்யிறோமுன்னு தெரியாம காமெடி பீசா இருந்து இன்னைக்கு அண்ணி... அப்படித்தான் சொல்றானுங்க... அதான் நானும் சொல்றேன்... பேசுது... அண்ணனை ஆளைக் காணோம்... இவரெல்லாம் நாடாண்டு... நாம நடுத்தெருவுலதான் நிக்கணும்..." என்றார் அவர்.

"அப்ப நீங்க சின்ன டாக்டர் வந்தா தமிழகம் சொர்க்க பூமியா மாறிடுன்னு சொல்ல வாறீங்க... அப்படித்தானே..." என்றான் அவன்.

"மாற்றம் தேவைங்க... அதுதான் சொல்றேன்..." என்றார் அவர்.

"என்ன மாற்றம்... சொர்க்கபூமியா இருக்காது... ஜாதி... ஜாதியின்னு... ஆளாளுக்கு வெட்டிக்கிட்டு செத்துப் போயி சுடுகாடா மாறிடும்..." என்றார் காரைக்குடி.

"அட ஏங்க நான் எதாவது பேசினா எல்லாரும் ஒண்ணு சேந்துப்பீங்க... எந்த கட்சிங்க ஜாதியை வைத்து அரசியல் பண்ணலை... பேசினா எதாச்சும் சொல்லுவீங்க... அதான் நான் பேசுறதில்லை... என்னை ஆளை விடுங்க... சாப்பிட்டு வாறேன்..." என்றபடி அவர் கிளம்பினார்.

"என்ன மாப்ள... இன்னைக்கு உப்புச் சப்பில்லாம முடிஞ்சிருச்சு... " சோகமாய்க் கேட்டான் மதுரை.

"கோர்த்து விட்டு அவரை பேச விடுவீங்கன்னு பார்த்தா.... எஸ்கேப் ஆயிட்டாரே..." என்றார் காரைக்குடி.

"அட விடுங்க... எல்லா நாளும் அவரு பேசுவாரா... மனுசன் வருத்தத்துல இருந்தாரு... அதான் நானும் ரொம்ப பேசலை... இப்ப கொஞ்சம் மனசு ரிலாக்ஸ் ஆயிருப்பாரு.... பாவம் கடன் அது இதுன்னு கஷ்டப்படுறாரு... புள்ளைங்க வேற காலேசு படிக்குதுங்க... மனசு வருந்தி... வருந்தி படுத்தாலும் தூக்கம் வராம ராத்திரியெல்லாம் புரண்டு புரண்டு படுக்குறாரு.... எதுக்குங்க அந்த மனுசனை ஏத்திவிட்டு... நாளைக்கு ரெண்டு திருவாலியத்தானுங்க வருவானுங்க... ஊத்திவிட்டு ஏத்திவிட்டுப் பார்ப்போம்... அப்ப பாருங்க ரகளையை..." என்றபடி எழுந்தான் அவன்.

படங்கள் : இணையத்திலிருந்து (நன்றி) 
(அட மூணு படம் மதுரைத் தமிழனோடது... இணையத்தில் சுட்டதுதான் என்பதால் திட்டமாட்டாருன்னு நம்புவோம்...)
-'பரிவை' சே.குமார்.

8 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

நண்பருக்கு சீக்கிரம் வேலை கிடைக்கட்டும்.
தம +1

Avargal Unmaigal சொன்னது…


மதுரைத்தமிழன் என்ன அடிவாங்கினாலும் வாய் திறந்தே பேசமாட்டாரு...அப்படி பட்டவரு யாரையும் திட்ட மாட்டாரு

Avargal Unmaigal சொன்னது…

வேலை வரும் போகும் ஆனால் மனம் தளராமல் இருங்கள் வெற்றி உங்களை வந்தடையும்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஹா...ஹா... தலைவரே.... இது வாக்காளர் அலப்பறை...
கற்பனையே....
இங்கு வேலை பிரச்சினை இருப்பதை மையப்படுத்தினேன் அவ்வளவே...

எங்க கம்பெனி புராஜெக்ட்ஸ் சில நிறுத்தப்பட்டாலும் வேலை இருக்குன்னு ஊருக்கு போறதுக்கு லீவு அப்ரூவ் பண்ண மறுக்கிறான்... ஸோ இப்போதைக்கு நமக்கு பிரச்சினை இல்லை....

அது போக கதையில் அவருக்கு காலேசுல படிக்கிற பிள்ளைங்க இருக்குன்னு சொல்லியிருக்கிறேன் பாருங்க... நமக்கு இன்னும் நடுநிலைப்பள்ளியைத் தாண்டலை....

சோ இது எனக்கான பகிர்வு அல்ல... அல்ல... அல்ல...
முழுக்க முழுக்க கற்பனையே...

'பரிவை' சே.குமார் சொன்னது…

அடியெல்லாம் கொடுக்கவும் மாட்டோம்... வாங்கவும் மாட்டோம்...
அன்பால மட்டுமே அடிப்போம்...
ரொம்ப நன்றி... படங்களை கிளிக்கி எடுத்த போதுதான் அது தங்கள் படங்கள் என்று தெரியும்....

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
இது கற்பனை அண்ணா....
சும்மா ஜாலிக்கானது....
அவ்வளவே...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார் முதல்ல நீங்க மதுரை, காரைக்குடியார் அப்படினு போட்டு அதுல வேற நம்ம மதுரைத் தமிழனின் படங்கள் வேறு வந்து விட்டதா...மெய்யாலுமே நீங்கள் மதுரைத்தமிழன், நீங்க மற்றொரு கற்பனைக் கதாபாத்திரம் எல்லோரும் அலப்பறை பண்ணுகின்றீர்கள் என்று நினைத்துவிட்டோம். அதுவும் நீங்கள் இருவருமே அரசியல் பதிவு போடுபவர்களா...அதனால்..ம்ம் அலப்பறை இங்கு மக்களிடையே போகும் யதார்த்த உரையாடல்கள். மாற்றம் வேண்டும் பார்ப்போம்...

Thenammai Lakshmanan சொன்னது…

அரசியல் பதிவு சுவாரசியம் குமார் தம்பி . :)