மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 6 ஏப்ரல், 2017

முனைவரும் பத்திரிக்கையாளரும்

னசுக்குத் தெரிந்த வலைத்தள நண்பர்களின் பிறந்தநாள் அன்று அவர்கள் குறித்துத் தெரிந்ததைச் சொல்லி, வாழ்த்துக் கட்டுரை வெளியிடுவதை சமீப நாட்களாக செய்து வருகிறேன். ஒரு சில நாட்கள் பதிவெழுத முடியாத நிலை வரும்போது முகநூலிலேனும் வாழ்த்தைச் சொல்லி விடுவதுண்டு. இந்த வாரத்தில் இது மூன்றாவது பிறந்தநாள் வாழ்த்துப் பகிர்வு. இன்றைய பகிர்வில் ஒரு முனைவரும்... ஒரு பத்திரிக்கையாளனும்...

Image result for பிறந்தநாள் வாழ்த்து

ஆசிரியர் பணி என்பது மிகவும் சிறப்பான ஒன்று... அதிலும் ஆத்மார்த்தமாக அந்தப் பணியைச் செய்யும் போது மனசுக்குக் கிடைக்கும் திருப்திக்கு ஈடு இணை எதுவும் இல்லை... அப்படிப்பட்ட ஆசிரியர் பணியில் நம் தாய் மொழி பயிற்றுவிக்கும் ஆசிரியராய் இருப்பது இன்னும் சிறப்பு. அப்படியானதொரு வாழ்க்கை அமைந்தால் அந்த வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் மிகவும் கொடுத்து வைத்தவர் என்றே சொல்வேன்.

ஒரு ஆசிரியர் மாணவர்களுக்குப் பிடித்த ஆசிரியராய் ஆகிவிட்டால்... ஆஹா... அதற்குப் பிறகு வேறென்ன வேண்டும். பெரும்பாலும் மற்ற ஆசிரியர்களைவிட தமிழாசிரியர்களுக்கு மாணவர்கள் மீது மிகப்பெரிய பற்றுதல்... கூடுதல் பாசம் இருக்கும். இந்த பாசத்தை என் ஆசிரியர்களிடம் நானும் அனுபவித்தவன் (என் பாக்கியம் கல்லூரியில் எங்கள் துறை ஆசிரியர்கள், தமிழ்த்துறை ஆசிரியர்கள் மற்றும் அனைத்துத் துறை ஆசியர்களும் பாசத்துடன் இருந்தார்கள்... இன்றும் இருக்கிறார்கள்) என்பதால் சொல்கிறேன். ஆம் தே பிரித்தோ மேல் நிலைப் பள்ளியில் படிக்கும் போது தாசரதி ஐயா, சவரிமுத்து ஐயா, அருள்சாமி ஐயா போன்றோருடன் கொஞ்சமே கொஞ்சம் உறவுதான் இருந்தது. கல்லூரிக்குச் சென்றதும் அங்கிருந்த தமிழ் ஐயாக்களுடன் எல்லாம் நெருக்கமாக, பழனி ஐயாவுடன் ரொம்ப நெருக்கமாகி, அவர் வீட்டில் கூடும் மாணவர் கூட்டத்தில் கலந்து இலக்கியம் பேசி அவரின் மனசுக்குப் பிடித்த மகன்கள், மகள்கள் ஆனவர்களில் நானும் ஒருவன். அவருடன் பழக ஆரம்பித்து தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்தில் உறுப்பினரான போது மீண்டும் தாசரதி ஐயா, அருள்சாமி ஐயா, சவரிமுத்து ஐயாவுடன் குடும்ப உறவானது. இன்றும் தொடரும் நட்பில் என் மனைவியைக் காணும் இடத்தில் எல்லாம் 'ஆத்தா மருமகளே... எம்மகன் நல்லாயிருக்கா..? எப்ப வரும்?' என சவரிமுத்தையா கேட்கத் தவறுவதில்லை. தமிழாசிரியர்களுக்கு எப்பவும் பாசம் அதிகம்தான் இல்லையா..? 

அப்படிப்பட்ட ஒரு ஆசிரியர்... மாணாக்கர்களால் விரும்பப்படுகிற தமிழாசிரியர்.... மாணவியரின் நன் மதிப்பைப் பெற்ற இந்த காரைக்குடிக்காரர்... தமிழ் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர்... கணினித் தமிழின் மீது காதல் கொண்டவர்... வேர்களைத் தேடி என்னும் வலைத்தளத்தில் தமிழ் சம்பந்தமான நிறைய விபரங்களைப் பகிர்ந்து வருபவர்... இவர் யாரென்று தெரிகிறதா..? ஆம் அவரேதான்... தன் மாணவிகளின் தனித்திறமையை வெளிக்கொண்டு வருவதுடன் அவர்களுக்கென தன வலைப்பதிவைத் தொடங்கி செல்வி. வைசாலி அவர்கள் வழி நடத்த ஒரு குழுவாய் மாணவிகளை சிறப்பாய் எழுத வைக்கும் நாமக்கல் கே.எஸ்.ஆர். கலை அறிவியல் கல்லூரி தமிழ் பேராசிரியர் முனைவர். இரா.குணசீலன் அவர்கள்தான்....

மற்றொருவர்... 'வர்' என்பது நட்பை சற்றே தள்ளி நிறுத்திவிடும் என்பதால் 'வன்' சேர்த்துக் கொள்கிறேன், அதில்தானே நட்பின் பிடிப்பும் ப்ரியமும் அதிகம் இருக்கும். இவன் என் நண்பன்.. சென்னையில் எனக்குக் கிடைத்த நண்பர்களில் ஒருவன் என்று மட்டும் சொல்லிச் செல்ல முடியாது. நாங்கள் இருவரும் ஓரிடத்தில் பணி செய்தோம்... வேலையில் குறை சொல்ல முடியாத நண்பன். என்னைப் போல இவனும் வெங்கியும் வளைந்து கொடுத்துப் போகத் தெரியாதவர்கள். அங்கிருந்த உள்நாட்டு அரசியலால் ஒதுக்கி வைக்கப்பட்டு வேலையை விட்டே சென்றவன்.. இன்று மற்றொரு இடத்தில் தன் திறமையைக் காட்டி உயர்ந்து நிற்கிறான். இன்னும் சாதிப்பான்.

காதல் திருமணம் புரிந்தவன்... எல்லாருக்கும் முடிந்தளவு உதவி செய்பவன்... மொத்தத்தில் நல்ல மனதுக்காரன்... வலையுலகில் நான் அடி எடுத்து வைக்க காரணமாக இருந்தவன்... 2009 எனக்கு கிறுக்கல்கள் என்ற வலைப்பூவை ஆரம்பித்துக் கொடுத்தவன். பத்திரிக்கை துறையில் கிட்டத்தட்ட நாலாண்டுகள் இணைந்து பணியாற்றி, இன்று அவன் மற்றொரு பத்திரிக்கையில் முக்கியமான பொறுப்பில் பத்திரிக்கையாளனாய் தொடர்கிறான்... நான் வெயில் தேசத்தில் வேறொரு பணியில் இருக்கிறேன்.. இருப்பினும் எங்கள் நட்பு எப்பவும் போல் நடை போடுகிறது.

தமிழ்க்கவிதைகள் என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் பத்திரிக்கையாளன் என் அன்பு நண்பன் மோ.கணேசனை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்... தெரிந்திருக்கும்... தற்போது நம் கில்லர்ஜி அண்ணனைப் போல் மீசை வைத்துக் கொண்டு ... புதிய தலைமுறை கல்வியில் வலம் வருகிறான்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் முனைவருக்கும் பத்திரிக்கையாளனுக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நீங்களும் வாழ்த்துங்கள்.

இன்று காலை முதல் எழுத நினைத்து வேலையின் காரணமாக இப்போதுதான் முடிந்தது.
-'பரிவை' சே.குமார்.

13 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

எங்கள் வாழ்த்துகளும்.

Angel சொன்னது…

இருவருக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

Avargal Unmaigal சொன்னது…

இருவருக்கும் இனிய வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இருவருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

இருவருக்குமே எங்கள் மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

கோமதி அரசு சொன்னது…

இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!

மோகனன் சொன்னது…

அட... இங்க இப்படி ஒரு வாழ்த்தா... நெகிழ்கிறேன் நண்பா... உன் அன்பில் திளைத்து மகிழும்...

மோ.கணேசன்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

பிறந்தநாள் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.

KILLERGEE Devakottai சொன்னது…

முனைவர் திரு.குணசீலன் அவர்களுக்கும், மீசைக்கார நண்பருக்கும் எமது வாழ்த்துகள்

G.M Balasubramaniam சொன்னது…

இவர்களது தளத்துக்குச் செல்ல வேண்டும் வாழ்த்துகள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அன்பான வாழ்த்துகள்...

Yarlpavanan சொன்னது…

இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.