மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 22 மார்ச், 2013

தள்ளாத வயதிலும் தனி ஈழம் கோரி வைகோ தாயார் உண்ணாவிரதம்

 vaiko s 91yer old mother on fast seeking tamil eelam



நெல்லை: தனி ஈழம் கோரியும், கொலைகார ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றவேண்டும் என்பதை வலியுறுத்தியும் வைகோவின் சொந்த ஊரான கலிங்கபட்டியில் அவரது தாயார் மாரியம்மாள் வையாபுரி (வயது 91) உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார். 

இனப்படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு தண்டனை, தனி ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

ஆங்காங்கே உண்ணாவிரதம், சாலை மறியல் தீவிரமடைந்துள்ள நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள், இன்று ஆயிரக்கணக்கானோருடன் கலிங்கப்பட்டியில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். 


இந்த போராட்டத்தினை மதிமுக ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர் அ.பழனிச்சாமி தொடங்கிவைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் வை.ராஜேந்திரன் தலைமையில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் உள்ளூர் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். 

கலிங்கப்பட்டியில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. சிறுவன் பாலச்சந்திரனின் உருவம் வரையப்பட்ட பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. 

இந்த போராட்டம் குறித்து நம்மிடையே பேசிய தாயார் மாரியம்மாள், 1990 ஆண்டு கலிங்கப்பட்டியில் உள்ள எங்களின் வீட்டில்தான் 37 விடுதலை புலிகளுக்கு உணவளித்து பாதுகாத்து வந்தோம். அப்போது காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த தோடு உணவளித்து உபசரித்தோம். அந்த பாசம் காரணமாகவே இப்போது உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்தார். 


இந்த போராட்டத்தில், நெல்லை மாவட்ட மதிமுக செயலாளர் தி.ப. சரவணன், இணைய தள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகம்மது அலி, மாநில மாணவர் அணிச் செயலாளர் கி.மு. ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

நன்றி : தட்ஸ் தமிழ் இணைய இதழ்


-'பரிவை' சே.குமார்

2 எண்ணங்கள்:

Yoga.S. சொன்னது…

அம்மாவுக்கு வணக்கம்!இந்தத் தள்ளாத வயதிலும் ஈழ மக்களுக்காய் உங்கள் உடல் வருத்தி...........நன்றி சொல்லிக் கொச்சைப்படுத்த விருப்பமில்லை.வாழ்த்த வயதும் இல்லை.

பெயரில்லா சொன்னது…

தாயாரின் உண்ணாவிரத போராட்டம்,போராடும் மைந்தர்களுக்கு ஆயிரம் யானை வலிமையை கொடுக்கும்.தாய்மையே,அன்னையே, நீ தமிழர்க்கு சம்ர்பித்த மகன்,புரட்சிபுயல் வைகோ வளர்தெடுத்த, லட்சியம் தாங்கிய லட்சோப லட்சம் தமிழ் இளைஞர்களும்,மாணவர்களும் உமது உண்ணாவிரத போராட்டம் கண்டு நெஞ்சம் நெகிழ்கிறோம்.

களமாடும் மகனுக்கு தோள்கொடுக்க,வளமான வாழ்வு துறந்து வாளெடுத்து வந்த தமிழே,தாயே...

நாங்களெல்லாம் ஆச்சரியபட்டதுண்டு,இடையறாமல் போராடும் குணம்,ஓய்வின்றி தமிழர்க்காய் களமாடும் நெஞ்சுரம்,சுகங்களை மறந்து,தமிழனின் துக்கம் தங்கி,அவன் துயர் துடைக்க இவ்ருக்கு வலிமை எங்கிருந்து வருகிதென்று.....

புரிகிறது தாயே,உந்தன் மைந்தன் உலகத் தமிழினத்தின் விடிவெள்ளியாய் உயர, உந்துசக்தி உம்மில் இருந்தே பிறந்ததென்பது தெரிகிறது...இப்போது எங்களின் ஆச்சர்யம் அற்றுப் போனது.

முறத்தால் புலியை விரட்டிய முது தமிழ் வழிவந்த தாயே....உங்களது உண்ணநிலை போராட்டம்,எதிரிகளை எரிதழல் குழியில் இடும் வலிமையை எங்களுக்குள் விதைத்திருக்கிறது.

அறுவடை செய்யும் காலம் கனிய போகிறது.காத்திருங்கள் காலடியில் சமர்பிக்கிறோம்.

உங்களை போல் தூய்மையான தாய்மை உள்ளன் துணையிருக்க ஈழம் மட்டுமல்ல உலகையே வெல்ல தமிழுக்கு தகுதி வாய்ப்பது சத்தியம்.

அன்னையே,உடல்நிலை கவனம் கொள்ளுங்கள்,இன்று ஒருநாளோடு உங்கள் நோன்பை முடித்துகொள்ள வேண்டுகிறோம்.எங்களுக்கு நீ வேண்டும்,உலகையே வெல்ல எங்கள் தலைவன் போர்களமாடினாலும்,வீடு திரும்புகையில்,தய் முகம் தேடும் குழந்தையாய் ஏங்கலாகாது உம் குழந்தை.
உங்களது போராட்டம் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்த வயதில்லை,ஆனால் உங்களது போராட்டம் வெற்றியை விரைவில் கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என்கிற நினைப்பை எங்களுக்கு சொல்லியிருக்கிறது....
காத்திருங்கள்...களத்திலிருந்து விரைவில் வெற்றி செய்தி வரும்...புரட்சி புயலை பெற்ற பொழுதினும் பெரிதாய் உவகை அடைவாய் தாயே...அந்த தருணம் விரைவில் வாய்க்க இயற்கையை பிரார்த்திக்கிறேன்!...