மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 30 மார்ச், 2013

மனசின் பக்கம் - கொஞ்சம்... கொஞ்சம்...



மனசின் பக்கம் எழுதி ரொம்ப நாளாச்சு... அதான் இன்று கொஞ்சம் எழுதலாமே என்று நினைத்து அமர்ந்தால் காலையில் இருந்து சோர்விலேயே நாள் ஓடிவிட்டது.  எப்படியும் எழுதணும் என்று ஆறு மணிக்கு ஆரம்பித்து அப்படியிப்படி என இரவு 11 மணிக்கு முடித்து அப்பவே பதிவாக பதிந்தாச்சு... அப்பாடா ...

கொஞ்சம் அரசியல்:

*சோனியாவின் பாசமலர் ஞானதேசிகனின் தூண்டுதல் மற்றும் துணையோடு மாணவர்களைத் தாக்கிய காங்கிரஸார் ஐம்பது பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக செய்தி படித்த போது சந்தோஷமாக இருந்தது. இருந்தாலும் இனத்துரோகிகளான இவனுகளை உள்ள தூக்கிப் போட்டு முட்டிக்கி முட்டி தட்டினால் சந்தோஷம் இரட்டிப்பாகும்.


*காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்ற வாசனின் கோரிக்கையை ஏற்க முடியாதாம். அதை பிரதமர் மட்டுமே முடிவு செய்ய வேண்டுமாம்... இதை சில நாட்களாக அதிகமாக கூவிவரும் நரகல்... மன்னிக்கவும் நாராயணசாமி சொல்லியிருக்கிறார். இந்த சாமிக்கும் அந்த சாமிக்கும் ஒரு நாளைக்கு கவனிப்பு செஞ்சா எல்லாம் சரியாகும் போல.

*முதல்வரை செருப்பைக் கழட்டிவிட்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் வாருங்கள் என்று சொன்ன மருத்துவரை (பேரு கருணாநிதியாம்.... இதுக்காகவே இருக்குமோ என்னவோ...) இரவு அவசரமாக கைது செய்து... நீதிபதி முன்பு நிறுத்தி சிறையில் அடைத்திருக்கிறார்கள்... வாழ்க அம்மாவின் ஆ(ட்)சி.

*சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாடக்கூடாது என்ற முதல்வரின் கோரிக்கையை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுள்ள போதும் சென்னையில் விளையாடவில்லை என்றால் கேரளாவில் நடத்தலாம் என்று உம்மன்சாண்டி சொல்லியிருக்கிறார். கூடங்குளம் மின்சாரம் உனக்கு வேணுமில்ல எங்களுக்கு கூடங்குளம் வேண்டாம் அதையும் நீ அங்கயே கொண்டு போயிக்க உம்முனசாண்டி.


கொஞ்சம் சினிமா:

*பாலாவின் பரதேசி குறித்து சைக்கோ எடுத்தபடம், ஜாதி வெறியனின் படம், கதாநாயகனை அரைவேக்காடாய் காட்டும் அற்பனின் படம், நாயகிகளை கரி பூசி நடிக்க வைக்கும் ஒருவனின் படம் என இன்னும் நிறைய விமர்சனங்களைப் படித்தாச்சு... எப்படி இருந்தாலும் பாலா என்ற ஒரு திறமைசாலியால் மட்டுமே ஒரு காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை இவ்வளவு தத்ரூபமாகத் தரமுடியும் என்று நிரூபித்த படம். மேலும் அப்படிப் படம் எடுத்தேன்... இப்படிப் படம் எடுத்தேன்... 90 கோடி போட்டேன்... 200 கோடி போட்டேன்... என்றெல்லாம் உதார்விட்டு சம்பாதிப்பதற்காக படம் எடுப்பவர்கள் மத்தியில் ஒரு நாவலை தன் பாணியில் மிக அழகாக தந்திருக்கிறார்.  அதற்காக அவருக்குப் பாராட்டுக்கள்.

*ஆச்சர்யங்கள் என்றொரு படம்... நல்ல கதை... கொஞ்சம் வித்தியாசமாய் போனது... நாயகனாக  நடித்தவர் நடிக்கவேயில்லை என்பதால் மொக்கையாகிவிட்டது. 

*கருணாஸின் சந்தமாமா, மனைவியை காதலிக்க வைத்து கதை எழுதுகிறாராம். படத்தில் பெண்கள் பற்றிய கேவலமான வசங்கள் வேறு... எல்லாவற்றிற்கும் போராட்டம் செய்வோம்... இதையெல்லாம் கண்டுக்க மாட்டோம்...

*தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் காதலைச் சொல்ல நல்ல வசனங்கள் பஞ்சம் போலிருக்கிறது. நான் பார்த்த சிலபடங்களில் நாயகன் நாயகி பார்த்த முதல் காட்சியிலேயே காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இருவருமே சுற்றம் பார்ப்பதில்லை. 


*வத்திக்குச்சியில் முருகதாஸின் தம்பிக்குப் பதில் வேறுயாராவது நடித்திருந்தால் கொஞ்சமாவது பத்தியிக்கும் போல. அஞ்சலி வழக்கம் போல அலட்டல் இல்லாத நடிப்பு... தயாரிப்பாளர் பக்கம் என்ன பஞ்சமோ தெரியலை அஞ்சலிக்கான உடைகள் கேவலமாக இருந்தது.

*கருப்பம்பட்டி என்ற ஒரு படம் லாஜிக்கே பாக்கக்கூடாது.... ரொம்ப போரா இருந்த ரெண்டு மணி நேரத்தை இப்படிப்பட்ட படங்களில் செலவழிக்கலாம்... எப்படியெடுத்தாலும் பார்ப்பார்கள் என்பதற்கு இது போன்ற படங்கள் உதாரணம்.

கொஞ்சம் வருத்தம்:

என்னுடன் சென்னையில் பணிபுரிந்த நண்பர் தண்ணியடித்துவிட்டு வண்டியில் போய் விபத்துக்குள்ளாகி யாரென்று தெரியாமலே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் அவரது அடையாள அட்டை மூலமாக அலுவலகத்துக்கு செய்தி சொல்லி அவர்கள் அங்கு பணியில் இருக்கும் எனது நண்பனுக்கு விவரம் தெரிவிக்க, அதன்பின் உறவுகளுக்கு தெரிவித்து ஒரு மாதம் மருத்துவமனையில் வைத்து ஆறு லட்சங்களை கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள்.

இப்போ சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்தாச்சு... ஆனால் அவருக்கு எதுவுமே தெரியவில்லையாம்... சின்னபிள்ளையாக இருக்கிறாராம்... ஊட்டிவிட்டால் சாப்பிடுவாராம்... அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள்... தண்ணியால் இன்று அவர் தன்னிலை மறந்து கிடக்கிறாராம்.. மருத்துவர்கள் சரியாகிவிடும் என்று சொல்லியிருக்கிறார்களாம்... அவர் நிலை குறித்து நண்பன் ஒரு மணி நேரத்துக்கு மேல் புலம்பியிருக்கிறான். பாவம் அந்தக் குழந்தைகளுக்காகவாவது அவர் மீண்டும் பழைய நிலைக்கு வரவேண்டும்...

கொஞ்சம் நட்புக்காக:

எனது நண்பன் தமிழ்காதலன், காயத்ரி அக்கா, தங்கை அனிதாராஜ் மூவரும் நிர்வகிக்கும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் மூலமாக அரியலூர் மாவட்டம் சிலம்பூர் கிராமத்தில் நூலகம் ஒன்றை கட்டி வருகிறார்கள். இப்பொழுது நூலகத்திற்காக பொருட்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். 

Cover Photo

நூல்கள் வழங்க விருப்பம் உடையவர்கள் அரிய வகைத் தமிழ் நூல்களான சங்க இலக்கியம், இலக்கணம், மருத்துவம், ஓலைச்சுவடி, ஆய்வுக்கட்டுரைகள் போன்ற நூல்களை வழங்கலாம். மேலும் கணினி, அலமாரிகள் மற்றும் நிதியுதவிகளை வழங்க நினைத்தால் அவர்களை தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கான முகநூல் விலாசம் கீழே...

தமிழ்க்காதலன்                   : https://www.facebook.com/thamizhkkaathalan
அனிதாராஜ்                               : https://www.facebook.com/AnithaRaj.2701
காயத்ரி வைத்தியநாதன்  : https://www.facebook.com/kayathrivaithyanathan


கொஞ்சம் மனசுக்காக:

ஒரு தொடர்கதை எழுதலாம் என்று நினைத்து முதல் பகுதியும் எழுதி அப்படியே கிடப்பில் கிடக்கு... இன்று பதியலாம் என்று நினைத்த போது என் நண்பனின் கைவண்ணத்தில் படங்கள் இருந்தால் இன்னும் நல்லாயிருக்கும் என்பதால் அவனிடம் பேசினேன்... அவனுக்கு அலுவலக வேலைகள் அதிகம்... அதனால் அடுத்த வெள்ளிக்குள் தருகிறேன் என்றான். என் நண்பன் வரையும் படங்களுடன் அடுத்த வெள்ளி அல்லது சனி ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம்... 

மனசின் பக்கம் தொடரும்...
-'பரிவை' சே.குமார்

5 எண்ணங்கள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பல்சுவை விருந்து பாராட்டுகள்....அப்படியே தமிழ் காதலன் டீமுக்கும் எனது வாழ்த்துகளை சொல்லிவிடுங்கள்...!

உம்மன் சாந்தியும் ச்சே உமன் சாண்டியும் சோனியாவின் செருப்பு பொருக்கிதானெ...?

பால கணேஷ் சொன்னது…

கொஞ்சம் அரசியல், கொஞ்சம் சினிமா, கொஞ்சம் நட்பு என மனசோடு கதைத்தது மகிழ்ச்சியான அனுபவம்! ஓவியங்களுடன் புதுத் தொடரா...? எதைப் பற்றிய கதை என்று சொல்லவேயில்லையே....

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தமிழ்க்குடில் அறக்கட்டளையின் சேவைகள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

r.v.saravanan சொன்னது…

மனசின் பக்கம் படிக்க சுவாரஸ்யமா இருக்குது குமார் சார் தொடர்ந்து எழுதுங்கள்

குடி குடியை கெடுக்கும் என்பதற்கு உதாரணம் தாங்கள் சொன்ன நண்பரின் கதை அவர் குணமாக வாழ்த்துக்கள்

தொடர்கதை க்கு வாழ்த்துக்கள் படிக்கிறோம்

Kayathri சொன்னது…

அறக்கட்டளையின் பணிக்காரணமாக உனது பதிவினை இப்பொழுதுதான் பார்க்கநேரிட்டது.

//பாலா என்ற ஒரு திறமைசாலியால் மட்டுமே ஒரு காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை இவ்வளவு தத்ரூபமாகத் தரமுடியும் என்று நிரூபித்த படம்.// உண்மை தம்பி.

தம்பியின் தொடர் நல்லமுறையில் அமைய வாழ்த்துக்கள்..

தமிழ்க்குடிலின் அறிமுகத்திற்கு மகிழ்ச்சி..வாழ்க வளமுடன்..:)